என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் |
தங்களது அபிமான ஹீரோக்களை ஆராதிக்கும் ரசிகர்கள், அவர்கள் படங்களில் செய்யும் நல்ல விஷயங்களை பின்பற்றுகிறார்களோ இல்லையோ ஸ்டைல் என்கிற பெயரில் அவர்கள் பண்ணும் மோசமான விஷயங்களை உடனே கவனிக்கிறார்கள். குறிப்பாக மது அருந்துவது, சிகரெட் புகைப்பது, கத்தி போன்ற ஆயுதங்களை கையாளுவது என இதுபோன்ற மோசமான செயல்களில்ன் தாக்கம் அவர்களை எளிதில் ஈர்க்கிறது.
புகைபிடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெறுவது தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, அட்லீஸ்ட் அந்த காட்சிகளை புரமோட் பண்ணாமலாவது இருக்கலாம். முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் மீது, அவரை விமர்சிப்பவர்கள் இப்போது வரை வைக்கும் குற்றச்சாட்டு அவர் தனது புகைபிடிக்கும் ஸ்டைலால் இளைஞர் சமுதாயத்தினரை தவறாக வழி நடத்தினார் என்பதுதான். அதனால் தான் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை கடந்த சில வருடங்களாகவே தவிர்த்து விட்டார் ரஜினிகாந்த்.
ஆனால் சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்திற்காக தனுஷ் ஸ்டைலாக புகை பிடிப்பதை போஸ்டராக வடிவமைத்திருந்தது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. மாரி படத்திலேயே அவர் இதுபோன்று புகைபிடிக்கும் கட்சிகளை புரமோட் செய்கிறார் என சர்ச்சை கிளம்பியது. இப்போதும் அதை விடாமல் தொடர்வதை பார்க்கும்போது வளரும் இளைஞர் சமுதாயத்தின் மீதான அக்கறை அவருக்கு இல்லையோ என்றே நினைக்க தோன்றுகிறது.
இவர்தான் அப்படி என்றால் நடிகர் விக்ரமும் இதேபோல செய்வது இன்னொரு அதிர்ச்சி. திரையுலகில் அவரது 30வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவர் தற்போது நடித்து வரும் மகான் படக்குழுவினர் நேற்று ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தனர். அதிலும் விக்ரம் புகைபிடிக்கும் காட்சியே இடம்பெற்றுள்ளது.
இப்படி தாங்கள் புகைபிடிக்கும் காட்சியை பார்த்து இளைஞர்களில் பலர் இதை பின்பற்றும் அபாயம் இருக்கிறது என்பதை நிச்சயம் அவர்கள் அறிந்திருப்பார்கள். போஸ்டர் டிசைன் பற்றிய முடிவை இயக்குனர் தான் எடுக்கிறார் என்றாலும் அதை நிச்சயம் ஹீரோக்களால் மறுக்க முடியும்.. அப்படியானால் இதுபோன்ற விஷயங்கள் அவர்கள் ஒப்புதலுடன் நடப்பதாகத்தானே அர்த்தம்.. இதுபோன்ற செயல்களை வெளிப்படையாக விளம்பரப்படுத்த தடை விதித்து பூனைக்கு மணி கட்டப்போவது யார் ?