ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கிட்டத்தட்ட எல்லா சேனல்களுமே அதனதன் சக்திக்கேற்ப நடன நிகழ்சிகளை நடத்துகிறது. இதன் நடுவர்களாக நடனம் தெரிந்த ஒரு சிலரோடு ஸ்டார் அட்ராக்ஷனுக்காக சிலரும் நடுவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள 'டான்ஸ் வெசஸ் டான்ஸ்: சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு நடுவராகியுள்ளார். அவருடன் பிருந்தா மாஸ்டரும் நடுவராக பணியாற்றுகிறார்.
இதுகுறித்த குஷ்பு கூறியிருப்பதாவது: நடனம் என்பது ஒரு கலை. அது என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று. எனக்கு அதில் மிகுந்த ஆர்வம் உண்டு. 'டான்ஸ் வெசஸ் டான்ஸ் முதல் சீசனை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. தற்போது என்னோடு பிருந்தாவும் நடுவராகப் பங்கேற்பது கூடுதல் மகிழ்ச்சி. எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இரட்டிப்பு ஆவலோடு நான் காத்திருக்கிறேன்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
அரசியலை விட்டு சற்று ஒதுங்கி உள்ள குஷ்பு, தற்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் தொகுப்பாளர், நடுவர் என்று பிசியாகி உள்ளார். விரைவில் திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.