விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

எண்பதுகளின் இறுதியில் துவங்கி முன்னணி கதாநாயகிகளாக வலம்வந்த நடிகைகளில் நடிகை நதியா மட்டுமே பார்ப்பதற்கு தற்போதும் இளமை தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறார். அவரை அடுத்து நடிகை குஷ்பு தனது தோற்றத்திலும் உடல் எடை குறைப்பிலும் தீவிர கவனம் செலுத்தி மீண்டும் இளமைக்கு திரும்ப முயற்சி செய்து வருகிறார். இதுகுறித்த உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் தனது ஸ்லிம்மான புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் குஷ்பு.
குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலானது.. இந்த நிலையில் தற்போது கண்ணாடி அணிந்து குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இளமை திரும்புதே.. புரியாத புதிராச்சே என்கிற பாணியில் குஷ்புவின் இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளது