ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கார்த்தி நடித்த கைதி படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கார்த்தி இந்த படம் வெளிவந்த உடனேயே கூறியிருந்தார். ஆனால் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த மாஸ்டர் , கமல் நடிக்கும் விக்ரம் படம், கைதி இந்தி ரீமேக், விஜய்யுடன் மற்றுமொரு படம் என ரூட் மாறி வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் கைதி 2ம் பாகம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தோன்றியது.
இந்த நிலையில் கைதி இரண்டாம் பாகும் வரும் என்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் கைதியான டில்லியின் பின்புலம் பற்றி அதிகமாக காட்டப்பட்டிருக்காது குறிப்பாக அவர் எதற்கு சிறைக்கு வந்தார் என்று கூறப்பட்டிருக்காது. படத்தின் முடிவில் வில்லன் அடைக்கலத்துக்கும், கைதி டில்லிக்கும் ஒரு கணக்கு பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் முடிச்சுப்போட்டு இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.