சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சவாலாக உள்ளது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை. அதனால் இதனை நம்மால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நம்மில் பலர் சந்திக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இதுபோன்ற நேரங்களில் நாம் நேர்மறையாகவும், நேர்மறையான மனதுடனும் இருப்பது நல்லது.
நம் சாதாரண ஹீரோக்கள் (முன்கள பணியாளர்கள்) சில அசாதாரணமான விஷயங்களைச் செய்கிறார்கள், இது எனக்கு நம்பிக்கையைத் தந்தது மற்றும் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது. இது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருவதற்கும், ஒரு சிறிய நம்பிக்கையைத் தருவதற்கும், உழைக்கும் இந்த ஹீரோக்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்கு நிறைய அன்பு. உங்களுக்கு நிறைய பலம். நன்றாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.