2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார். மோகன்ராஜா இப்படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அவற்றிற்கான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சிரஞ்சீவி. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தை பார்த்தாராம். படம் பிடித்துப் போகவே அதை தனக்கேற்றபடி கதை அமைத்துத் தருமாறு 'சாஹோ' இயக்குனர் சுஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் கதை விவாதம் நடத்தி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இரண்டு அஜித் படங்களின் ரீமேக்கில் ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியம்தான்.