ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கு பான்-இந்தியா ஹீரோவாக மாற வேண்டும் என்பதுதான் தற்போதைய பெரும் கனவாக உள்ளது. 'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ், பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். அவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளிவர உள்ளன. 'பாகுபலி' படத்தின் பெரும் வெற்றி அவரது இமேஜயும், சம்பளத்தையும் பன் மடங்கு உயர்த்திவிட்டது.
பிரபாஸ் போல தங்களது மார்க்கெட்டும் இந்திய அளவில் உயர வேண்டும், தங்களது சம்பளம் 100 கோடியைக் கடக்க வேண்டும் என்ற பேராசையில் சில ஹீரோக்கள் உள்ளனராம்.
தமிழ் நடிகரான விஜய் தன்னுடைய அடுத்த படங்களை பான்-இந்தியா படங்களாகத்தான் உருவாக்க வேண்டும் என்று சொன்னதாகத் தகவல். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் கூட 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு 'கேஜிஎப்' இயக்குனரான பிரஷாந்த் நீல் உடன் இணைய உள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படமான 'புஷ்பா' படமே பான் இந்தியா படம்தான். அப்படத்திற்குப் பிறகு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். ராம் சரண் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனர் ஷங்கருடன் இணைய உள்ளார்.
தெலுங்கில் ராஜமவுலி, தமிழில் ஷங்கர் கன்னடத்தில் பிரஷாந்த் நீல் ஆகியோர்தான் இப்போதைக்கு பிரம்மாண்ட இயக்குனர்களாக அறியப்பட்டுள்ளார்கள். பல கோடி செலவில் அடுத்து யார் படங்களை இயக்கப் போகிறார்களோ அவர்களும் பிரம்மாண்ட இயக்குனர்களாக மாறிவிடுவார்கள்.