ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சார்மி கவுர். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் வாழ்த்து செய்திகளால் அவரது சோஷியல் மீடியா பக்கம் நிரம்பி வழிந்தது. இதுஒரு பக்கம் இருக்க வெறும் வாழ்த்துக்களோடு நின்று விடாமல் சார்மிக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதை ஒரு வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சார்மி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பரபரப்பான நடிகையாக வலம் வந்த சார்மி, தற்போது ஒரு தயாரிப்பாளராக மாறி முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார்.. அந்தவகையில் தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லிகர்' என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படம் மூலம் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டதன் வெளிப்பாடாகத்தான் இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை அனுபியுள்ளார் விஜய் தேவரகொண்டா.