கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான படம் 'கிளாஸ்மேட்ஸ்'.. பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித், காவ்யா மாதவன் உட்பட பல இளம் முன்னணி நடிகர்கள் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். லால்ஜோஸ் இயக்கிய இந்தப்படம் தமிழில் கூட நினைத்தாலே இனிக்கும் என்கிற பெயரில் ரீமேக்கானது.
கல்லூரியில் படித்த நண்பர்கள் அனைவரும் பல வருடங்களுக்குப்பின் ஒன்றாக சந்திக்க கூடுவதாகவும் மாணவர்களின் கல்லூரி காலங்களை நினைவுபடுத்துவது போலவும் கதை அமைந்திருந்ததால் ரசிகர்களிடம் இப்போதும் இந்தப்படத்திற்கு மவுசு குறையாமல் இருக்கிறது.
இந்தநிலையில் தற்போதைய கொரோனா தொற்று காலகட்டத்தில் சக நடிகர்கள் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து பேசிக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் கழிந்த நிலையில் இந்தப்படத்தில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித் ஆகிய நால்வரும் வீடியோ சாட்டிங்கில் ஒன்று கூடி பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த ஏற்பாட்டை செய்திருந்த நடிகர் பிரித்விராஜ் இதுகுறித்த தகவலை தங்களது சாட்டிங் புகைப்படங்களுடன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.