‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி. நல்ல திறமையான நடிகை என்ற பெயர் எடுத்தார். அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, நாடோடிகள் 2, பாவ கதைகள், உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பேசப்பட்டது.
தற்போது அவருக்கு தமிழில் படங்கள் கையில் இல்லாவிட்டாலும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த வக்கீல் சாப் படம் பெரிய வெற்றி பெற்று அஞ்சலிக்கு மீண்டும் ஒரு எழுச்சியை கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கும் அஞ்சலி இனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் உறுதிய அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வக்கீல்சாப்பை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி. இது மிகவும் பொருத்தமான கதை என்பதால் நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த படம் எனது தொழில் வாழ்க்கையின் மற்றொரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்.
என் அன்பான ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக எனது வேலையை நேசித்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி. நான் உங்களுக்கு நல்ல படங்களை மட்டுமே தந்து, தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதிய உள்ள அஞ்சலி, வக்கீல் சாப் படத்தின் இயக்குனர் வேனுவுக்கு கலர் பொடி பூசி மகிழும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.