ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அசுரன்'. இப்படத்தை அதே பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து யு-டியுபில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டனர்.
இரண்டு மாதங்களுக்குள்ளாகவே யு-டியுபில் இப்படம் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. நம்ம ஊர் கதைக்களத்துடன், நமது கிராமத்துக் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட படத்திற்கு ஹிந்தியில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தைப் பார்த்துள்ள பல வட இந்திய ரசிகர்களும் தனுஷையும், படத்தையும் வெகுவாகப்ப ராட்டியுள்ளனர்.
'அசுரன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது தனுஷ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'கர்ணன்' படத்தையும் ஹிந்தியில் டப்பிங் செய்யும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில் 'கர்ணன்' படமும் ஹிந்தியில் வெளியாக உள்ளது.