101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி | பிப்ரவரி 21ல் 5 படங்கள் ரிலீஸ் | தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! |
கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பு நடவடிக்கைக்கு கொரோனா நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து திரையுலகினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
திரையுலகில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி அளித்தனர். தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் (ரூ.25 லட்சம்) நடிகராக உதயநிதி (ரூ.25 லட்சம்), அஜித் (ரூ.25 லட்சம்), சவுந்தர்யா ரஜினியின் மாமனார் குடும்பத்தினர் சார்பாக (ரூ.1 கோடி) நிதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இயக்குனர் வெற்றிமாறன்(ரூ.10 லட்சம்), நடிகர் சிவகார்த்திகேயன் (ரூ.25 லட்சம்), நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் சார்பாக ரூ.10 லட்சம்) என முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி குடும்பத்தினர் இதற்கான காசோலையை வழங்கினர்.