23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? |

பில்லா பாண்டி, வேட்டை நாய் படங்களை தொடர்ந்து ஆர்கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விசித்திரன். கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தான், தற்போது தமிழில் 'விசித்திரன்' ஆக ரீமேக்காகி உள்ளது.. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார்.
ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ள இந்தப்படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் பாலாவும் ஆர்கே.சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
இதுபற்றி ஆர்கே சுரேஷ் கூறும்போது, “முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்தன.. ஆனால் என் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் இயக்குனர் பாலா தான் என்னை கதாநாயகனாக நடிக்கும்படி கூறினார். அதுமட்டுமல்ல ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமாரே இந்தப்படத்தை இயக்கட்டும் என சுதந்திரமும் கொடுத்தார். தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட நிறைய பேர் கேட்கிறார்கள்.. தயாரிப்பாளர் பாலாதான் பட ரிலீஸ் குறித்து தீர்மானிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.