பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நகைச்சுவை நடிகர்களில் சம போட்டியாளர்களாக நடித்து வந்தவர்களில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக மாறிய பின்னர், நடிகர் சூரியின் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும்.. ஆனால் மாறாக கடந்த சில வருடங்களாக நடிகர் சூரியின் திரைப்படங்களை அதிகம் வெளியாகவில்லை. வெற்றிமாறன் டைரக்சனில் கதாநாயகனாக நடிக்கும் சூரி, அடுத்ததாக வேலன் என்கிற படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
கவின் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். கோவையில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக நடிக்கிறார் சூரி. அதற்கேற்றபடி மம்மூக்கா தினேஷன் என்றே சூரியின் கதாபாத்திரத்திற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மம்முட்டியை கேரள ரசிகர்கள் மம்மூக்கா என்றே அழைப்பார்கள். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த தகவலையும் சேர்த்தே வெளியிட்டுள்ளனர்.