பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தற்போது தமிழில் 'விசித்திரன்' என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கி வருகிறார்.
இயக்குனர் பாலாவின் 'பி ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே இந்தப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் இந்தப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா, ஆர்கே.சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப்படத்தை தயாரித்ததற்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆர்கே.சுரேஷ், பாலாவுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியையும் பதிவிட்டுள்ளார்.