மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தெலுங்கில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை வசீகரித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியானது. அதனாலேயே அதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தனர். ஆனால் முதல் படத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது படத்தில் கிடைக்கவில்லை. தவிர கிசுகிசுக்களில் வேறு இருவரும் வசமாக சிக்கிக்கொண்டனர்.
இதனால் இந்த இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் மூன்றவதாகவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனராம், இந்தப்படத்தை பிரபல முன்னை இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வரும் சுகுமார் அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக இந்தப்படத்தை துவங்க இருக்கிறாராம்.