6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
சென்னை : கொரோனாவால் பாதித்த தன்னை மருத்துவமனைக்கே வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறிய இயக்குனர் லிங்குசாமி குறித்து, இயக்குனர் வசந்தபாலன் நெகிழ்ந்துள்ளார்.
வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கொரோனா தொற்றால் பாதித்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அபாயக் கட்டத்தில் இருந்த போது, இயக்குனர் லிங்குசாமி நேரில் சென்று ஆறுதல் கூறி விட்டு வந்தார். தற்போது உடல்நலம் தேறியுள்ள வசந்தபாலன், லிங்குசாமியின் ஆறுதல் கூற வந்ததை, கவிதை வரிகளாக வடித்துள்ளார்.
அவர் எழுதியுள்ளதன் சுருக்கம்: வீரம் என்றால் பயமில்லாத மாதிரி நடிப்பதல்ல, பேரன்பின் மிகுதியில்; நெருக்கடியான நேரத்தில் அன்பானவர்கள் பக்கம் நிற்பதே.போன வாரம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இதை கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி மிருகமாய் உழண்ட வண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது. என்னை பார்க்க போராடி அனுமதி பெற்று முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே என்னைப்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆண்பெண்குவின் போன்று தோற்றமளிக்கிறது. என்னையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது ‛டாக்டர்' என உச்சரிக்கிறேன். ‛லிங்குசாமிடா...' என்றது அந்த குரல். அத்தனை சுவாசக் கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி ‛டே! நண்பா...' என, கத்தினேன் ‛பாலா...' என்றான். அவன் குரல் உடைந்திருந்தது வந்திருவடா...‛ம்' என்றேன்.
என் உடலைத் தடவிக் கொடுத்தான். எனக்காக பிரார்த்தனை செய்தான். என் உடையாத கண்ணீர் பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது. ‛தைரியமாக இரு...' என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும் போது யார் இந்த தேவதுாதன் என்று மனசு அலட்டியது. இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே, பின்னே ஓடியது.‛உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா...' என்றேன்.‛நானிருக்கிறேன்... நாங்களிருக்கிறோம்...' என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு... ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..
இவ்வாறு வசந்தபாலன் எழுதியுள்ள வரிகள் இணையத்தை கலக்கி வருகிறது.