சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் 1981ல் மே 15ம் தேதி வெளிவந்த 'நியாயம் காவாலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளிவந்து இன்றுடன் 40 வருடங்கள் ஆகிறது.
கோதண்டராமி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் 1984ம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க 'விதி' என்ற பெரியல் ரீமேக்காக பெரும் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய முதல் படமான 'நியாயம் காவாலி' படம் பற்றி ராதிகா இன்று டுவிட்டரில், “என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு பாதையில் மாற்றிய முதல் தெலுங்குப் படம் 'நியாயம் காவாலி'. வாழ்க்கை முழுவதும் நண்பனான சிரஞ்சீவி, கோதண்டராமி ரெட்டி, சாரதா மேடம், தயாரிப்பாளர் கிராந்திகுமார். ஒரு முழு நடிகையாக எப்படி பயணத்தை ஆரம்பிப்பது என்ற விழிப்புணர்வைக் கொடுத்த படம்,” என குறிப்பிட்டுள்ளார்.