மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி | சித்தார்த்-தின் மிஸ் யூ தள்ளிப்போனது | நண்பனை நினைத்து வருந்திய வைஷ்ணவி அருள்மொழி | பாராசூட்: தமிழில் தயாரான முதல் குழந்தைகள் வெப் தொடர் | சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் ஷாருக்கான் | ராஜீவ் மேனன் யாரென்று தெரியாது: இளையராஜா குசும்பு | 'மிஸ் யூ' படம் மூலம் தயாரிப்பாளரான மோனிகா | பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஸ்ருதிகா |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்றுடன் அவருடைய 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்தது. இதையடுத்து கொரோனாவை சமாளிக்க 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஆண்ட்ரியா.
1. கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும் பாசிட்டிவ்வாக இருங்கள். பயம் என்பது நெகட்டிவ் எமோஷன், அது அனைத்தையும் மோசமாக்கும். நலமடைவது மட்டுமே குறிக்கோள் என கவனமாக இருங்கள், ஒன்றும் ஆகாது.
2. கோவிட் 19 வைரஸ் மூக்கு, தொண்டை வழி, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும். அதனால், காற்று போகும் பாதையை சுத்தமாக வைத்திருங்கள். ஆவி பிடிப்பது பல மாற்றத்தை ஏற்படுத்தும். மூச்சுப் பயிற்சியை விடாமல் செய்யுங்கள்.
3. நீங்கள் சாப்பிடுவது, குடிப்பதும் மிகவும் முக்கியமானது. நமது தினசரி உணவில் பல சூப்பர் உணவுகள் நமக்கு உள்ளது ஆசீர்வாதமானது. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் தூள் கலந்த பால் ஆகியவை நல்லது. சளியை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர், ஜுஸ் ஆகியவற்றை அடிக்கடி குடியுங்கள்.
4. உங்கள் பால்கனி, மொட்டி மாடி ஆகிய இடங்களில் நல்ல காற்றை தினமும் சுவாசியுங்கள். அப்படியில்லை என்றால் ஜன்னலைத் திறந்து விட்டு நல்ல காற்றை சுவாசியுங்கள்.
5. விட்டமின் சி, பி, ஜின்க் ஆகியைவை நமது எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியவை. அஷ்வகந்தா, துளசி மற்றும் பல இந்திய மூலிகைகள் இருக்கின்றன. ஆனால், அவை நமக்குத் துணையாக இருப்பவை மட்டுமே மருத்துவம் அல்ல. அதனால், உங்கள் டாக்டரை ஆலோசித்து அதற்கேற்றபடி மருத்துவம் பாருங்கள்.
6. நெகட்டிவ் செய்திகளைப் பார்ப்பது, கோவிட் நிலவரம் ஆகியவற்றை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதீர்கள். அழுத்தம் உங்களது எதிர்ப்புக் சக்தியைக் குறைக்கும். புத்தகம் படியுங்கள், உங்களுக்கு விருப்பமான இசையைக் கேளுங்கள், உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன், அன்பானவர்களுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.
7. நீங்கள் தனிமையில் வசிப்பவராக இருந்தால் ஆதரவாக இருக்க மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்களுக்கு உதவி செய்ய பல ஹெல்ப்லைன்கள் உள்ளன.
8. உங்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, பணியாட்கள், டிரைவர்கள், வாட்ச்மேசன் ஆகியோரையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு ஜுரம் வந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள வைப்பது உங்கள் பொறுப்பு.
9. காத்திருக்க வேண்டாம், அதுவே மிகவும் தாமதமானது. உங்களது அறிகுறிகள் மோசமடைந்தாலோ, ஆக்சிஜன் லெவல் குறைந்தாலோ டாக்டரை உடனே தொடர்பு கொள்ளுங்கள். உதவி கிடைக்கும் வரை உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளுங்கள்.
10. கோவிட் 19 ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வந்தால் அது உங்களின் தவறு அல்ல. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் உங்களையோ மற்றவர்களையோ தவறாகப் பேச வேண்டாம். கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களை கனிவாக அணுகுங்கள். இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.
என பத்து ஆலோசனைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, “நான் குறிப்பிட்டிருப்பது மிகவும் குறைவான விதத்தில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்குத்தான். இதை டாக்டர்களுடன் உறுதி செய்த பிறகே உங்களுக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளேன்.
நான் வீட்டிலேயே குணமடைந்துவிட்டேன். கோவிட்டால் பாதிக்கப்படும் பல இளம் வயதினருக்காக எனது இதயம் துடிக்கிறது. இதிலிருந்து வெளியே வர வேண்டுமென்றால் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான், உடனடியயாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதுதான் சிறந்த வழி,” என தன்னுடைய அனுபவத்தைப் பதிவாக இட்டுள்ளார்.
வேறு எந்த ஒரு நடிகையும் இந்த அளவிற்கு தைரியம் தரக் கூடிய ஒரு பதிவையும் இடவில்லை. அந்த விதத்தில் ஆண்ட்ரியாவைப் பாராட்ட வேண்டும்.