செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், தினசரி யாரவது ஒரு பிரபலம் தாங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தகவல் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிக்பாஸ் புகழ் ஆஜித், கேப்ரில்லா இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வெளியான நிலையில், தற்போது நடிகர் செண்ராயனுக்கும் கொரோனா பாசிடிவ் என அதிர்ச்சி ரிசல்ட் வந்துள்ளது.
இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள செண்ராயன், “நமக்கெல்லாம் எங்கே கொரோனா பாதிப்பு ஏற்பட போகிறது என கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.. எல்லாவற்றையும் பாசிடிவாகவே பார்க்கும் எனக்கு இப்போது கொரோனாவும் பாசிடிவாகவே வந்து விட்டது. வீட்டில் தனியறையில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.. இந்த கொரோனா பொல்லாதது.. மக்களே உஷாராக இருங்கள்.. அலட்சியம் வேண்டாம்” என கூறியுள்ளார்.