'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் |
சலார், ஆதிபுருஷ், ராதே ஷியாம் என ஒரே நேரத்தில் மூன்று மெகா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் ஓம்ராவத் என்பவர் இயக்கி வரும் ஆதிபுருஷ் படம் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகிறது. பிரபாசுடன் பாலிவுட் நடிகர் சயூப் அலிகானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கீர்த்தி சனோன், சன்னி சிங் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகரான நான் ஈ சுதீப்பும், ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளார். புராணக் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் சுதீப் விபீஷ்ணன் வேடத்தில் நடிக்கிறார். ஆதிபுருஷ் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் இறுதியில் இருந்து தொடங்குகிறது. அப்போது சுதீப்பும் கலந்து கொள்கிறார்.