கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை |
தமிழில் 'பொய் சொல்லப் போறோம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித் நடித்த 'ஏகன்', கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை, அபியும் அனுவும்' உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
இன்று காலை முதலே டுவிட்டரில், “தன்னுடைய அண்ணன் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்,” என கவலையுடன் பதிவிட்டு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
“உத்தரப்பிரதேசத்தில் உள்ள, பரூகாபாத் நகரில் உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் தனது சகோதரருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களைச் சொல்லுங்கள், குழப்பத்தில் இருக்கிறோம்,” என காலையில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், எந்த உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை போலிருக்கிறது. சற்று முன்னர் 'எனது சகோதரர் உயிரிழந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.