படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டதில் சிலர் வெற்றி பெற்றார்கள், சிலர் தோல்வியுற்றார்கள். நடிகரான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளரான அம்பேத்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அவர்களோடு தியேட்டர் ஓனர் ஒருவரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஐடிரீம் என்ற தியேட்டர் ஓனர் மூர்த்தி.
அவர் தோற்கடித்தது ஒரு அமைச்சரை என்பதுதான் ஆச்சரியத் தகவல். அதிமுக அரசில் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை எதிர்த்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் மூர்த்தி. ஜெயக்குமாருக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு பல வருடங்களாக இருக்கிறது. அதையும் மீறி மூர்த்தி வெற்றி பெற்றதை அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியேட்டர் ஓனராக பாஜக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் ஓனர் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வத்தின் மகன்.
இவர் திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபுவை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்த வினோஜ் பின்னர் பின்தங்கினார்.
திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் ஒருவர் தற்போது சட்டமன்றத்தில் இடம் பெற உள்ளார். அவர் மூலம் தங்கள் பிரச்சினைகள் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.