2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள திரையுலகில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தொடர்ந்து அக்கறை காட்டுவதுடன், அதுபற்றி சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அப்டேட் பண்ணி வருபவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் கூட, 'மேப்படியான்' என்கிற படத்திற்காக தொப்பை வளர்த்த இவர், பின்னர் கடும் உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக சுமார் 16 கிலோ எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தினார்.
இந்தநிலையில் மலையாள சினிமாவின் கொழுக் மொழுக் நடிகையான அனு சித்தாரா, தனது உடல் எடையை குறைக்க ரொம்பவே சிரமப்பட்டு வந்தார். இதற்காக நல்ல டயட்டீஷியன் ஒருவரை தேடிவந்த சமயத்தில் தான், உன்னி முகுந்தனுடன் இணைந்து மேப்படியான் என்கிற படத்தில் நடித்தார். அந்த சமயத்தில் உன்னி முகுந்தனிடம் தனது பிரச்சனையை அவர் சொல்ல, அவருக்கு பெண்களுக்கே உரிய டயட் முறை பற்றி கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
அவர் கூறிய டயட்டை சரியாக பின்பற்றிய அனு சித்தாரா, தற்போது ஒரே மாதத்தில் சுமார் ஆறு கிலோ எடையை குறைத்து விட்டேன் என கூறியுள்ளதுடன், சிறந்த டயட்டை கூறி வழிகாட்டியதற்காக உன்னி முகுந்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.