டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேம்நாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். மேலும் கொரோனா தொற்றுக்கும் ஆளாகி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் பேசவேண்டும் என்பதை தனது கடைசி ஆசையாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி இருந்தார் ஹேம்நாத்.
இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவுக்கு எட்டியதும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக, அந்த ரசிகர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருடன் வீடியோ காலில் பேசினார். அவர் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறும்போது, “உன்னோடு பேசியதும் உன் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது.. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஹேம்நாத்” என கூறியுள்ளார்..