'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் விஜய்சேதுபதி தற்போது இரண்டாவது முறையாக மலையாளத்தில் நடித்துள்ள, அவரது 19 (1)(a) என்கிற படமும் விரைவில் ஒடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. முன்னணி ஒடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறது..
இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். தவிர, மலையாள நடிகர் இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.




