'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார் ஜோடி இணைந்த முத்து, படையப்பா ஆகிய இரண்டு படங்களும் அவர்களது திரைப்படப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்த படங்கள். அந்த இரண்டு படங்களையும் மிஞ்சும் வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பூஜை போடப்பட்ட படம் ராணா. படப்பூஜை நடந்த முடிந்ததும் ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலமுடன் திரும்பினார்.
அதன்பின் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. சமீபத்தில் தன்னுடைய தயாரிப்பில் ஆரம்பமான புதிய படத்தின் பூஜையின் போது ரஜினிகாந்த் மீண்டும் ராணா கதையை முழுவதுமாகக் கேட்டார் என கேஎஸ் ரவிக்குமார் சொன்னார்..
![]() |