மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 30 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராகும் படம் “பாம்பாட்டம்“. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் வி.சி.வடிவுடையான். நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். இவரின் லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டனர் இது ரசிகர்களின் மத்தியில் பெரும்வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் குதிரையில் வருவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் சுமன், சரவணன், ரமேஷ்கண்ணா, வெங்கட் என ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுபின்னணிகொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் கையாளப்படும் கதை, அதனால் பெரும் பொருட்செலவில் செட்டுகள் அமைத்து சிஜிக்கு மிக முக்கியம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது. திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.