இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் பறம்பு குமாரதாஸ் தயாரிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் கும்பாரி. யோகிபாபு நடிப்பில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.
நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இயக்குனர் கெவின் கூறியதாவது : இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம் என்றார்.