பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

8 தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆப் காதல் படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது அவர் புதிதாக ரோட் மிஸ்ட்ரி ஜார்னரில் தயாராகும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். பிக்சர் பாக்ஸ் கம்பெனி தயாரிக்கிறது. விளம்பர படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இதுவரை பல வகையிலான விளம்பர படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் எப்போதும் என்னுடைய கனவு திரைப்படத்தை இயக்குகிறேன். திரைக்கதையை எழுதி முடித்த பிறகு புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும், ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடினேன்.
அந்த வகையில் துவக்கத்திலேயே இறைவி கருப்பன் என தரமான படங்களை விநியோகம் செய்த, தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் அவர்களை அணுகினேன். முழு திரைக்கதையை அவரிடம் விவரித்தவுடனேயே படத்தை தயாரிக்க ஒப்புகொண்டு சம்மதம் தெரிவித்தார்.
இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார்.
இது ரோட் மிஸ்ட்ரி வகை கதை. இந்த மாதிரி படங்களில் எப்போதும் க்ளைமாக்ஸில் தான் சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருக்கும்.




