அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? |

தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்து. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கவுள்ள இந்தப்படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.




