ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த 2019ல் கிச்சா சுதீப் நடித்த பயில்வான், சைரா நரசிம்ம ரெட்டி, தபாங்-3 ஆகிய படங்கள் வெளியாகின.. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருடம் இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அவரது அடுத்த படமாக விக்ராந்த் ரோணா ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சுதீப். கடந்த பிப்-27 முதல் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு வாரம் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். இதனால் இந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் எபிசோடுகளில் சுதீப் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து கூறியுள்ள சுதீப், “மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் நானும் பார்வையாளர்களை போல, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு பதிலாக ஒரு வாரம் அவரது மருமகள் சமந்தா தொகுத்து வழங்கியது போல, கன்னடத்தில் இந்த வாரம், எந்த பிரபலம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த போகிறார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை