லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் |
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா பிரச்னை துவங்கியபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு பஸ், ரயில், ஏன் விமானங்களில் கூட அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உதவி செய்து வந்தார். சிலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். விவசாய செய்ய ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். நிறைய பேருக்கு படிக்க செல்போன் வாங்கி தந்தார். இப்படி ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இப்போது நடிகர் சோனு சூட்டும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில் அவர் கூறுகையில், "கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் எனது மன நிலை அதை விட உறுதியாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார் சோனு சூட்.