2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

நகைச்சுவை நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் விவேக். ஆனால், அவர் நடிகராக இருந்த இந்த 34 வருட காலத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவேயில்லை.
பல சந்தர்ப்பங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க முடியாதது பற்றி தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த 'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் விவேக். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை படக்குழுவினர் தான் தெரிவிக்க வேண்டும்.
இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில நாட்கள் கலந்து கொண்டு விவேக் நடித்துள்ளார் என்கிறார்கள். ஆனால், கமல்ஹாசனுடன் அவருக்குக் காட்சிகள் இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படியே அவர் நடித்திருந்தாலும் அதைப் பார்க்க அவரால் முடியாது என்பதும் மிகப் பெரும் சோகமே.