ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரிக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் "மதுரை மணிக்குறவன்". மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சுமன், ராதாரவி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜரிஷி இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களுக்கும் ஒரேநாளில் இசை கோர்ப்பை செய்துள்ள இவர், ‛மனசில பெரியவன் தான் மதுரக்காரன்...' என்ற பாடலையும் பாடியுள்ளார். இளையராஜா புதிதாக கட்டியுள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.