சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‛எனிமி'. அவன் இவன் படத்திற்கு பின் மீண்டும் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் வினோத் கூறுகையில், ‛‛'எனிமி' படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. சென்னையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விரைவில் அதையும் முடித்துவிட்டு, இரண்டு வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிட உள்ளோம்'' என்றார்.