2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கெனவே அவர் சில இந்தி படங்களில் ஓரிரு காட்சிகளில் பாடகராக வந்து பாடல்கள் பாடி இருக்கிறார். இசை ஆல்பங்களில் தோன்றி நடித்திருக்கிறார். வந்தேமாதம் ஆல்பத்தில் அவர் தோன்றி நடித்தது உலக புகழ்பெற்றது. இந்த நிலையில் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்.
சிலர் படம் இயக்குவீர்களா? என்று கேட்கிறார்கள். அந்த ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்க்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என்றார் ரஹ்மான்.