இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் | பழைய பாடலின் இசையுடன் 'பைட் கிளப்' டீசர் |
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜேந்திரன் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக டிவியில் வெளியான படம் ‛மண்டேலா'. இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது. தற்போது ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துவிட்டு வீடியோ கால் மூலமாக யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐபிஎல்., போட்டியில் ஐதராபாத் அணியில் விளையாடும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன் நெட்பிளிக்ஸில் மண்டேலா திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேச வைத்தார்" என பதிவிட்டுள்ளார் ஸ்ரீவத்ஸ்.