கொள்கை மீறி தாலிக்கட்டியது ஏன்? - விக்ரமன் விளக்கம் | ஸ்வேதா ஷ்ரிம்படன் வைரல் கிளிக்ஸ்! | ஆந்திர முதல்வர், துணை முதல்வர் குறித்து சர்ச்சைப் பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு | 'கங்குவா' படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு | புஷ்பா -2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமா? | குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் சமந்தா! | பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணைந்த ஜார்ஜ் மரியன், இந்துமதி மணிகண்டன்! | சித்தார்த்தின் 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியானது! | 'பழைய சம்பளம்' வாங்கிய படத்திற்கு மீண்டும் வந்த கவின் | ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
இயக்குனர் ராஜமவுலியின் கடந்த கால படங்களை எடுத்துக் கொண்டால், மகதீரா வெளியானபோது அதுபற்றியே பிரமிப்பாக பேசியவர்கள், ஒரு ஈயை வைத்து அவர் ஈகா என்கிற படத்தை எடுத்து மிரட்டியபோது, மகாதீரவை மறந்தே போனார்கள். அதேபோலத்தான் பாகுபலி படங்களின் இரண்டு பாகங்கள் வெளியானபோது மகதீரா, ஈயை பற்றி மறந்துவிட்டார்கள்.. இப்போது வரை ராஜமவுலி என்றால் பாகுபலி பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் இருவரையும் இணைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இந்தப்படம் அக்-13ல் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார் லண்டன் தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ள உமைர் சந்து என்பவர். படத்தின் சில காட்சிகளின் ரஷ் பார்த்ததாகவும், இந்தப்படம் வெளியானால் மக்கள் அனைவரிடமும் பாகுபலி படத்தையே மறக்கடித்து விடும் அளவுக்கு மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிப்புடன் கூறியுள்ளார் உமைர் சந்து.