அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
கொரோனா ஊரடங்கு காலத்திறகு பிறகு உலகம் முழுக்கவே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டது. சில நாடுகள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றி தியேட்டர்களை திறந்துள்ளது. என்றாலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட், ஒண்டர் உமன் உள்ளிட்ட பல படங்கள் வெளிவரத் தயக்கம் காட்டி வருகிறன்றன. படம் நன்றாக இருந்தாலும் மக்கள் தியேட்டருக்கு வராமல் போனால் பல ஆயிரம்கோடி நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதே இதற்கு காரணம்.
இதேபோன்ற ஒரு நிலைதான் தமிழ்நாட்டிலும் இருந்தது. ஆனால் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி அது தியேட்டர்காரர்களுக்கும், தயரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தது. இதேபோன்ற ஒரு நம்பிக்கையை நேற்று உலகம் முழுக்க வெளியான காட்ஸிலா வெசஸ் காங் படம் கொடுத்திருக்கிறது.
ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் வெளியாகி உள்ள காட்ஸில்லா வெசஸ் கிங்காங் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்தியாவில் வெளியான இந்த படம் முதல் நாளில் மட்டுமே 6.4 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார முடிவில் 15 முதல் 20 கோடி வசூலை இந்தியாவிலேயே இந்த படம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் இனி வரிசையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபெக்கா ஹால் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். காட்ஸில்லா படத்திற்கும், கிங்கான் படத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இப்போது இரண்டு கேரக்டரும் மோதும் இந்த படத்திற்கு இரண்டின் ரசிகர்களும் திரண்டு தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.