என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கி உள்ள மலையாள திரைப்படமான மரைக்கார் அரபிக் கடலின்ட சிம்மம் படத்திற்கு 3 தேசிய விருகள் கிடைத்திருக்கிறது. கொரோனா காலம் என்பதால் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் அசோக் செல்வனும் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அசோக் செல்வன் கூறியிருப்பதாவது: மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஒரு அழகான திரைப்படம். இந்திய அளவில் எல்லா வகையிலும் சிறந்ததொரு நடிகரென, புகழ்பெற்ற நடிகர் மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது, நான் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நொடியை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
பிரியதர்ஷன் போன்ற இயக்குநரின் படத்தில் நடிப்பது மிகப்பெரும் பெருமை. சினிமாவின் அத்தனை சாத்தியங்களையும் தினசரி படப்பிடிப்பில் அவரிடம் கற்றுக் கொண்டேன். மிகப்பெரும் பட்ஜெட்டில், மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து உருவாக்கியுள்ள இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியடையும் எனும் நம்பிக்கையை, அனைவருக்கும் தந்துள்ளது.
விநியோக களத்திலும் திரையரங்கிலும் இப்படம் கொண்டாடப்படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அனைத்தையும் கடந்து, மிகபெரும் பெருமை மற்றும் மிகப்பெரும் மகிழ்ச்சி யாதெனில் எங்கள் திரைப்படம் சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த உடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றிருப்பது தான்.
2020 மிக இனிமையான ஆண்டாக துவங்கியது. எனது திரைப்படம் ஓ மை கடவுளே ஒரு நடிகராக மிகப்பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது. மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் மூலம் மிகப்பெரும் அடையாளம் கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது படத்திற்கு கிடைத்திருக்கும் தேசிய விருதுகள் படத்தின் மீது இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஒரு நடிகராக தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் நின்னில நின்னில மற்றும் மலையாளத்தில் மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என மற்ற மொழி திரைப்படங்களிலும் பணியாற்றுவது, சினிமா குறித்து நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவத்தை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.