சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல மலையாள காமெடி நடிகர் பக்ரு. அங்கு ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். உலகில் அதிக படங்களில் நடித்த உயரம் குறைவான நடிகர் என்கிற கேட்டகிரியில் கின்னஸ் சாதனை படைத்தவர். தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, 7ம் அறிவு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குட்டியும் கோளும் என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்குருவுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பக்ரு தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பக்ரு தனது டுவிட்டரில் "எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அனைவரும் எச்சரிக்கையாகவம், பாதுகாப்பாகவும் இருங்கள். இப்போது உடல் நலம் தேறி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்" என்று கூறியிருக்கிறார்.