படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
புச்சிபாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த தெலுங்குப் படம் 'உப்பெனா'. இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் நல்ல லாபத்தைச் சம்பாதித்தது.
தெலுங்குத் திரையுலகம் பாராட்டிய இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரான புச்சிபாபுவுக்கு 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்1 காரை பரிசாக வழங்கியது தயாரிப்பு நிறுவனம். தன்னுடைய புதிய காரில் தன்னுடைய குருநாதர் இயக்குனர் சுகுமாரை உட்கார வைத்து முதல் ரவுண்டு சென்றார் புச்சிபாபு.
இயக்குனர் புச்சிபாபுவைத் தேடி தற்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தின் நாயகி கிரித்தி ஏற்கெனவே சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். விஜய் சேதுபதிக்கும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகின்றன.
'உப்பெனா' படத்தின் வெற்றி தெலுங்குத் திரையுலகத்திற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் கருதுகிறார்கள்.