டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
இயற்கை சார்ந்த படங்களை எடுத்து தன்னைத் தமிழ் சினிமாவில் பேச வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். 'மைனா, கும்கி' ஆகிய படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிலும் குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 'கயல்' படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள 'காடன்' படம் தமிழ், தெலுங்கில் நாளை மறுதினம் 26ம் தேதி வெளியாக உள்ளது.
'மைனா, கும்கி' இரண்டு படங்களுமே காடு சார்ந்த படங்கள். அந்த வரிசையில் இந்த 'காடன்' படமும் காடு சார்ந்த படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றியை இருவருமே மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அது போலவே பிரபு சாலமனுக்கும் இது முக்கியமான படம்தான். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கயல், தொடரி' ஆகிய இரண்டு படங்களுமே தோல்விப் படங்கள் தான்.
இந்த 'காடன்' வெற்றி அவர்கள் மூவருக்குமே முக்கியமான ஒன்று.