மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' |
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 1979-ஆம் ஆண்டு 'வெள்ளி ரதம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், 'முந்தானை முடிச்சு' 'வைதேகி காத்திருந்தாள்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடைசியாக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த 'சதிலீலாவதி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கோவைத்தமிழ் பேசி ரசிகர்களை கவந்தார் கோவை சரளா. ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அவர், இன்றைக்கும் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மீண்டும் கதாநாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு காமெடி காட்சிக்கூட இருக்காது என்று கூறப்படுகிறது.
பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வரும் இப்படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.