வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

மைனா, கும்கி என இயற்கையின் பின்னணியில் படம் இயக்கிய பிரபுசாலமன் அடுத்து இயக்கி உள்ள படம் காடன். 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் தற்போதையை வாழ்வியல் தொடர்பானது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரபுசாலமன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு படத்திற்கும் நான் நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடும் ஒரு ஹீரோவை காட்ட விரும்பவில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல், காடுகள், நம்மை போலவே வாழும் உரிமை உள்ள விலங்குகள் இவற்றை பற்றி யார் பேசுவது. காடுகளில் யானையின் பங்கு மிகப்பெரியது. கும்கி எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் யானைகளின் நிலை என்ன என்பது குறித்து உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் காடன். இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இயற்கையை, சக உயிர்களை நேசிக்கிற அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.




