திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
“அதிமேதாவிகள், காவல்துறை உங்கள் நண்பன்” படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆர்டிஎம் எனும் ரஞ்சித் டி.மணிகண்டன் - நடிகர் சுரேஷ் ரவி கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளார்கள். இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார்.
இயக்குனர் ஆர்டிஎம் கூறுகையில், “காவல்துறை உங்கள் நண்பன்” படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்று தந்தது. அந்தபடத்தில் காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டிய நிலையில் நாயகன் சுரேஷ் ரவி, தற்போது உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழின் பிரபல நடிகர்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். கே.எஸ்.விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தின் இசையமைப்பாளரை இறுதி செய்யவிருகிறோம். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம் என்றார்.