காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். சில மாதங்களுக்கு முன்பு இவரது முதல் திரைப்படமான 'என்ன சொல்ல போகிறாய்' வெளியானது. இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் சத்தமின்றி நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு செம்பி என பெயரிட்டு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தையுடன் அஷ்வின் அமர்ந்துள்ளார். மற்றொரு போஸ்டரில் கோவை சரளா இதுவரை நடித்திராத ஒரு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.