ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
நடிகை பாவனாவுக்கு அவரது சொந்த வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அந்த கசப்பான நிகழ்வுகளின் நினைவில் இருந்து வெளியேறி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கன்னட சினிமாவில் அதிகம் நடிக்கிறார். அடுத்து மலையாளத்திலும் நடிக்க உள்ளார்.
தற்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஹாய்' புகழ் ஜிஎன் ருத்ரேஷ் இயக்குகிறார். இதில் பாவனா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இது இரட்டை சகோதரிகள் பற்றிய கதை. அடுத்து, திக்கக்கக்கொரு பிரேமொண்டர்ன் என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். இதனை ஆதில் மைமூநாத் அஷ்ரப் இயக்குகிறார். பாவனாவுடன் ஷரபுதீன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது தவிர தி சர்வைவல் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு படம். இதில் பாவனா குத்துச் சண்டை வீராங்கணையாக நடித்திருக்கிறார். மார்பு புற்றுநோயல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதனை எதிர்த்து போராடி எப்படி வாழ்க்கையிலும், குத்துச் சண்டையிலும் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.