'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
மலையாளத்தில் மோகன்லால் தற்போது நடித்து வரும் படம் 'ஆராட்டு'.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னி கிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது. தற்போது சென்னையிலேயே நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது மோகன்லால், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காதலன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட்டான முக்காலா முக்காபுல்லா பாடல், இந்தப்படத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒலிப்பதாகவும் அந்த பாடலுக்கு மோகன்லாலும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து நடனம் ஆடுவதாகவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம். இதுநாள் வரை மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது மோகன்லால் நடித்த 'யோதா' என்கிற படத்திற்கு மட்டும் தான். அந்தவகையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லாலுடனேயே மலையாள படத்திற்காக தனது பங்களிப்பை தந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.